குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

இரவு முழுவதும் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
Published on

தென்காசி,

தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (19-01-2025) கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ராமநாதபுரம் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு கருதி மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com