மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

அருவியின் அழகை மற்றும் இயற்கை காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு
Published on: 

நெல்லை,

மணிமுத்தாறு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மணிமுத்தாறு அருவி அமைந்துள்ளது. சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து, மணிமுத்தாறு அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும், அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காகவும் அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்துள்ளனர். அருவியின் அழகு மற்றும் இயற்கை காட்சிகளை பார்த்து ரசிப்பதற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com