வெள்ளப்பெருக்கு... குற்றாலம் அருவியில் குளிக்க மீண்டும் தடை

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது.
வெள்ளப்பெருக்கு... குற்றாலம் அருவியில் குளிக்க மீண்டும் தடை
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த தொடர் சாரல் மழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. மழை குறைந்து, நீர்வரத்து சீரானதை தொடர்ந்து நேற்று அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அனைத்து அருவிகளிலும் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக மெயின் அருவியில் குளிப்பதற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com