பூ வியாபாரி மர்ம சாவு

பூ வியாபாரி மர்மமான முறையில் இறந்தார்.
பூ வியாபாரி மர்ம சாவு
Published on

கரூர் மாவட்டம் தோகைமலை வடசேரியை சேர்ந்தவர் கண்ணையன் (வயது 53). இவர் பூ வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் திருச்சி சோமரசம்பேட்டை அருகே சத்திரப்பட்டியில் பூ வியாபாரம் செய்ய வந்தார். அப்போது, அவர் வியாபாரத்தை முடித்து விட்டு அந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையில் இரவு படுத்து தூங்கினார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com