

கும்பகோணம்,
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலர் முக்கண்ணன். இவர் அலுவலகத்தில் இருந்த போது கோவில் அர்ச்சகர்கள் சிலர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் முக்கண்ணனுக்கு சாமிக்கு அலங்காரம் செய்வது போல் மாலைகளை அணிவித்து வேதங்களை கூறினர். அப்போது ஒருவர் அதிகாரி மீது மலர்களை தூவினார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசு அதிகாரிக்கு வேதமந்திரங்கள் கூறி மலர் அபிஷேகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.