பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சிவிவசாயிகள் கவலை

பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சிவிவசாயிகள் கவலை
Published on

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் சந்தையில் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பூக்கள் சாகுபடி

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பல்வேறு வகையான பூக்களை சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.600-க்கும், சம்பங்கி கிலோ ரூ.140-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.240-க்கும், முல்லைப் பூ ரூ.600-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது.

விவசாயிகள் கவலை

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கும், சம்பங்கி கிலோ ரூ.100-க்கும், அரளி கிலோ ரூ.60-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், முல்லை பூ கிலோ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.120-க்கும், கனகாம்பரம் ரூ.300-க்கும் ஏலம் போனது.

கடந்த வாரத்தை ஒப்படுகையில் நேற்று பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்து விற்பனை ஆனதால் பூக்கள் சாகுபடி செய்த விவசாயிகள் கவலை அடைந்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com