மல்லிகைப்பூ கிலோ ரூ.1200-க்கு விற்பனை

விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாளையொட்டி மல்லிகைப்பூ ஒரே நாளில் ரூ.400 அதிகரித்து கிலோ ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மல்லிகைப்பூ கிலோ ரூ.1200-க்கு விற்பனை
Published on

விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாளையொட்டி மல்லிகைப்பூ ஒரே நாளில் ரூ.400 அதிகரித்து கிலோ ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளையொட்டி திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகளவு உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக பூக்களின் விலை குறைவாக இருந்த நிலையில் நேற்று சட்டென்று விலை அதிகரித்து காணப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், சேலம், நிலக்கோட்டை, திண்டுக்கல், பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து பூக்கள் திருப்பூர் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. விலை அதிகமாக இருந்தபோதும் பொதுமக்களும், வியாபாரிகளும் அதிக அளவில் பூக்களை வாங்கி சென்றனர்.

விலை நிலவரம்

திருப்பூர் பூ மார்க்கெட்டில் நேற்று விற்பனை செய்யப்பட்ட பூக்களின் விலை விவரம் வருமாறு:-

மல்லிகைப்பூ நேற்று முன்தினம் கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ரூ.400 உயாந்து கிலோ ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதுபோல் நேற்றுமுன்தினம் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட முல்லை நேற்று ரூ.400 உயர்ந்து கிலோ ரூ.800-க்கும், ஜாதிமல்லி ரூ.600-க்கும், ரோஜா ரூ.240-க்கும், அரளி பூ ரூ.150-க்கும், சம்பங்கி ரூ.250-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) முகூர்த்த நாள் என்பதாலும், நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்களின் தேவை அதிகமாக இருக்கும் எனத்தெரிகிறது. இதனால் இன்று பூக்களின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று வியாபாரிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com