பொங்கலை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு - மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிப்பூ கிலோ ரூ.2,500-க்கு விற்பனை

மாட்டுத்தாவணியில் உள்ள மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பொங்கலை முன்னிட்டு பூக்கள் விலை உயர்வு - மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிப்பூ கிலோ ரூ.2,500-க்கு விற்பனை
Published on

மதுரை,

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் கரும்பு, மஞ்சள் உள்ளிட்டவற்றின் விற்பனையும், பூக்களின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. அதே சமயம் பூக்களின் விலையும் தற்போது அதிகரித்துள்ளது.

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிப்பூ ரூ.2,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல் முல்லைப்பூ கிலோ ரூ.1,300, பிச்சிப்பூ கிலோ ரூ.1,200-க்கு விற்பனையாகிறது.

மேலும் கனகாம்பரம் 300 ரூபாய் முதல் 1,500 ரூபாய்க்கும், ரோஜா 50 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com