நல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

மாளாபுரம் நல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடந்தது.
நல்லமுத்து மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
Published on

பாபநாசம்:

பாபநாசம் தாலுகா, மாளாபுரம் கிராமத்தில் நல்லமுத்து முத்துமாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது. விழாவை முன்னிட்டு திரளான பக்தர்கள் அக்னி சட்டி, பால்குடம், முளைப்பாரி ஆகியவற்றை எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர். இதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com