தில்லை காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி

தில்லை காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தில்லை காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி
Published on

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட அரண்மனைகுறிச்சி கிராமத்தில் உள்ள தில்லை காளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் ஒன்றிணைந்து திருமழபாடி கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் நீரையும், பூக்களையும் எடுத்துக்கொண்டு மேள தாளங்களுடன் கோலாட்டத்துடன் பாதயாத்திரையாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த புனித நீராலும், பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன்பின் பக்தர்கள் கொண்டு வந்த பூக்களை ஒன்றாக கொட்டி பூஜை செய்து அந்த பூக்களை அம்மன் மீது தூவினர். இதில், அரியலூர், திருமானூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com