முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா

ஆவுடையார்கோவில் அருகே முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
முத்துமாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா
Published on

ஆவுடையார்கோவில் அருகே பாண்டி பத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 21-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி பாண்டி பத்திரம் விநாயகர் கோவிலில் இருந்து பூக்களை தட்டுகளில் வைத்து பெண்கள் தங்களது தலையில் சுமந்தபடி கிராமத்தின் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் முத்துமாரியம்மனுக்கு மலர்களை செலுத்தி அம்மனை தரிசித்து சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com