விதை விற்பனை நிலையங்களில் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு

செய்யாறு, வந்தவாசியில் விதை விற்பனை நிலயங்களில் பறக்கும் படையினர் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது 5,694 கிலோ விதைகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டது.
விதை விற்பனை நிலையங்களில் பறக்கும் படையினர் திடீர் ஆய்வு
Published on

செய்யாறு, வந்தவாசியில் விதை விற்பனை நிலயங்களில் பறக்கும் படையினர் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது 5,694 கிலோ விதைகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டது.

பறக்கும் படையினர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மற்றும் வந்தவாசி பகுதிகளில் உள்ள விதை விற்பனை நிலையங்களில் விதைகள் விற்பனை செய்ய உரிமம் உள்ளதா, இருப்பு புத்தகம், விற்பனை புத்தகம், தகவல் பலகை போன்றவைகள் விதை சட்டம் 1966 மற்றும் விதைக்கட்டுப்பாடு ஆணை 1983-ன் படி கடைபிடிக்கின்றார்களா என வேலூர் விதை ஆய்வு துணை இயக்குனர் சோமு தலைமையிலான விதை ஆய்வாளர்கள் பறக்கும் படை அமைத்து திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பயிர் பருவம் தெளிவாக குறிப்பிடாமலும், விதை பரிசோதனை முடிவுகள், பதிவுச்சான்று, வெளி மாநில விதைகளுக்கான படிவம்-2 ஆகிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.1 லட்சத்து 99 ஆயிரம் மதிப்புள்ள 5,694 கிலோ எடையுள்ள 7 விதை குவியல்கள் கண்டறியப்பட்டது. இந்த விதைகளை விவசாயிகளுக்கு விற்பனை செய்ய தடை செய்து பறக்கும் படையினர் உத்தரவிட்டனர்.

15 விதை மாதிரிகளை...

மேலும் ஆய்வின் போது சந்தேகிக்கும் வகையில் இருந்த 15 விதை மாதிரிகளை சேகரித்து முளைப்பு திறன் பரிசோதனை செய்யவும் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து விதை ஆய்வு துணை இயக்குனர் கூறுகையில், 'விவசாயிகள் விதை வாங்கும் முன் பயிர், ரகம், பருவம், காலாவதி நாள் மற்றும் வயது போன்ற அடிப்படை விபரம் நன்கு அறிந்து வேளாண்மை துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களிடம் ஆலோசனை செய்து அவர்களின் பரிந்துரைப்படியே விதைகளை வாங்கி பயன்பெற வேண்டும்' என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com