சேலத்தில் பறக்கும் படை சோதனை: 3 பேரிடம் ரூ.4.5 லட்சம் பறிமுதல்

சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பகுதியில் பறக்கும் படையினர் அதிகாரி வள்ளிமுனியப்பன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர்.
சேலத்தில் பறக்கும் படை சோதனை: 3 பேரிடம் ரூ.4.5 லட்சம் பறிமுதல்
Published on

சேலம்,

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026னை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டு செயல்முறை (Standard Operating Procedure) மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி, முறையான ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் ரூ.10,000/-த்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்கள் மற்றும் ரூ.50,000/- மேல் ரொக்கமாக கொண்டு செல்லப்படும் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். பின்பு விசாரணையில் முறையான ஆவணங்களை மேல்முறையீட்டு குழுவிடம் (Appellate authority) தாக்கல் செய்யும் பட்சத்தில் மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைக்கப்படும்.

இந்நிலையில் சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பகுதியில் பறக்கும் படையினர் அதிகாரி வள்ளிமுனியப்பன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாழப்பாடி பகுதியை சேர்ந்த பெரியசாமி என்பவர் வந்த காரை சோதனை நடத்தினர். அதில் ரூ.89 ஆயிரம் இருப்பதும் அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதை பறிமுதல் செய்தனர்.

அதே போன்று செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் ஆவணம் இன்றி எடுத்து வந்த ரூ.2 லட்சத்து 71 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அதே போன்று நெத்திமேட்டை சேர்ந்த செல்வராஜ் எடுத்து வந்திருந்த ரூ.96 ஆயிரத்து 800 என 3 பேரிடம் ஆவணம் இன்றி எடுத்து வந்ததாக மொத்தம் ரூ.4 லட்சத்து 56 ஆயிரத்து 800-ஐ பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com