சென்னையில் மதுபான கடைகளை கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள் அமைப்பு - சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ்

சென்னையில் மதுபான கடைகளை கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மதுபான கடைகளை கண்காணிக்க பறக்கும் படை குழுக்கள் அமைப்பு - சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ்
Published on

சென்னை,

இது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆணையர் பிரகாஷ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற 06.04.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக மதுபானங்கள் கடத்தலுக்கு எதிரான புகார்கள், தினசரி விற்பனையை கண்காணித்தல், மொத்தமாக கொண்டு செல்வதை தடுத்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் கடைகள் செயல்படுவதை கண்காணித்தல், கொரோனா வைரஸ் தொற்று குறித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட அளவிலான பறக்கும் படை குழு மண்டல அளவிலான பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

எனவே, தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக மதுபானங்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1900-425-7012 என்ற எண்ணிலும், மேற்குறிப்பிட்டுள்ள அதிகாரிகளின் கைபேசி எண்ணிற்கும் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com