

சென்னை,
சென்னை சென்டிரலில், தெற்கு ரெயில்வே தலைமையகத்தில் உள்ள மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) அலுவலகத்தில் அதன் பொதுச்செய லாளர் என்.கண்ணையா நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணி காரணமாக பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொகிறார்கள். இந்தநிலையை சமாளிக்க, ரெயில்வே நிர்வாகத்துடன் நடை பெற்ற ஆலோசனைப்படி சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் 'ஷட்டில் மின்சார சேவைகள்' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று முதல் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயிலில் கூடுதலாக 3 பெட்டிகள் இணைத்து 15 பெட்டிகள் கொண்ட மின்சார ரெயில் சேவைகள் எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, பரங்கிமலை-சென்னை கடற்கரை இடையே பறக்கும் ரெயில் வழித்தடத்தில் வருகிற 5-ந்தேதி பாதுகாப்பு கமிஷனர் சோதனை மேற் கொள்கிறார்.
வருகிற 7-ந்தேதி முதல் பறக்கும் ரெயில் சேவை தொடங் கப்பட உள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்தின் 10-வது நடைமேடை வழியாக அடுத்த 20 முதல் 22 நாட்களுக்குள் ரெயில்களை இயக்கும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.