கொரோனா வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றுங்கள் - பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்வதற்காக கட்டாயம் இரண்டு முகக்கவசம், தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றுங்கள் - பொதுமக்களுக்கு முதல்-அமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் ஸ்டாலின் விழிப்புணர்வு விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முகக்கவசம் மனிதர்களுக்கு உயிர் கவசமாக மாறியுள்ளது. அதனால் அதனை அனைவரும் அணிய வேண்டும். முடிந்தால் அதிக மக்கள் கூடும் இடங்களில் இரண்டு முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள்.

வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்புபவர்கள் கட்டாயம் கை,கால்களை சுத்தம் செய்துகொண்டு, தனிமையில் இருந்துகொள்ளுங்கள்.

விழிப்புணர்வுடன் இருந்து "நம்மையும் காத்து நாட்டு மக்களையும் காப்போம்" என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com