சென்னையை தொடர்ந்து, கோவையிலும் டீ, காபி விலை உயர்வு..!

கோப்புப்படம்
கோவையிலும் விலை உயர்த்தப்பட்டு இருப்பது டீ, காபி பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை,
மக்களின் விருப்பமான பானங்களில் முக்கிய இடம் பிடிப்பது டீ மற்றும் காபி ஆகும். பொதுவெளியில் எங்கே சென்றாலும் மக்கள் டீக்கடைகளை நாடுவதுண்டு. வெயில், மழை என எந்த காலமாக இருந்தாலும் டிக்கடைகளில் மட்டும் கூட்டம் குறையாமல் இருக்கும். இப்படி, வாழ்க்கையின் ஒரு அங்கமாகவே மாறிப்போன டீ மற்றும் காபி பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தியாக, அவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு டீ, காபி ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டது. இதில், டீ ரூ.15, காபி ரூ. 20 என உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் சென்னையை தொடர்ந்து தற்போது கோவையிலும் டீ, காபி விலை உயர்ந்துள்ளது. இதில், டீ ரூ. 20, காபி ரூ. 26, பிளாக் டீ உள்ளிட்டவை ரூ. 17 என உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு டீ, காபி பிரியர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையுடன் ஒப்பிடுகையில் கோயம்புத்தூரில் டீ மற்றும் காபி உள்ளிட்டவற்றின் விலை சற்று அதிகமாகவே இருப்பதாக கூறப்படுகிறது.






