கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் செயற்கை நுண்ணறிவு துறைக்கு தனி அமைச்சர்

நாட்டிலேயே கேரளா மற்றும் தமிழ்நாட்டில்தான் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு தனியாக அமைச்சர்கள் உள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழகத்தின் 12-வது முதல்-அமைச்சராக கடந்த 10-ந் தேதி ஜோசப் விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 9 பேர் அமைச்சராக பொறுப்பு ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கம் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உள்பட மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

புதிய அமைச்சரவையில், உலகின் எதிர்காலத் தொழில்நுட்பமாகக் கருதப்படும் 'செயற்கை நுண்ணறிவு' (ஏ.ஐ.) துறைக்கு எனத் தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை வேளச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.குமார், இந்தத் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இனி அவர், செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் என்று அழைக்கப்படுவார்.

கேரளாவில் மட்டும் செயற்கை நுண்ணறிவு துறைக்கு தனியாக அமைச்சர் நியமிக்கப்பட்டு இருந்த நிலையில், இப்போது தமிழ்நாட்டிலும் அந்த துறைக்கு தனியாக அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில், நாட்டிலேயே கேரளா மற்றும் தமிழ்நாட்டில்தான் செயற்கை நுண்ணறிவுத் துறைக்கு தனியாக அமைச்சர்கள் உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com