

வாணாபுரம் தாலுகா சின்னக்கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உணவு திருவிழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார கல்வி அலுவலர் பழனிமுத்து, மோகன் சவுந்தர்ராஜன், பகண்டை கூட்டுரோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சீர்ப்பனந்தல் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் லட்சுமி, மேலாண்மை குழு தலைவர் ராசாத்தி, துணை தலைவர் கவிதா, கல்வியாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை உணவுகள் குறித்தும், அதில் உள்ள சத்துக்கள் குறித்தும் பேசினர். பின்னர் மாணவர்கள் கொண்டு வந்திருந்த உணவு பொருட்களை பார்வையிட்டு வினாக்கள் கேட்டு, சிறப்பாக விடையளித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் முதல் பரிசாக 1-ம் வகுப்பு மாணவர் தருண், 2-ம் பரிசாக 5-ம் வகுப்பு மாணவி தேவதர்ஷினி, 3-ம் பரிசாக 5-ம் வகுப்பு மாணவி ஹேமவர்ஷினி ஆகியோருக்கு வழங்கப்பட்டது.