மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு

ஆறுமுகநேரியில் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.
மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு உணவு
Published on

ஆறுமுகநேரி:

மாவட்ட பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்க சார்பில் மே தின விழா ஆறுமுகநேரியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சங்கத்தில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து வீரபாண்டியன் பட்டணம் கருணாலய இல்லத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தலைவர் உச்சிமாகாளி, மாவட்ட பொருளாளர் ரீபாய்தீன், ஆறுமுகநேரி நகர தலைவர் சி.ராஜேஷ், செயலாளர் இசக்கிமுத்து, பொருளாளர் கண்ணன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com