உணவு பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும்

உணவு பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உணவு பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும்
Published on

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர பொது வினியோக திட்ட ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:- அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அத்தியாவசிய பொருட்கள் 15-ந்தேதிக்குள் நகர்வு செய்யப்பட வேண்டும். நுகர்வு குறைவாக உள்ள ரேஷன் கடைகளை ஆய்வு செய்து நுகர்வு அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நகல் ஸ்மார்ட் கார்டு கேட்டு விண்ணப்பித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக ஸ்மார்ட் கார்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் உள்ள பொருட்கள் தரமாக இருக்க வேண்டும்.

5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆதார் எண் குடும்ப அட்டையில் சேர்க்கப்படாமல் உள்ள குழந்தைகளின் ஆதார் எண்ணை குடும்ப அட்டையுடன் இணைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பகுதிநேர ரேஷன் கடை பிரிப்பதற்கு வரப்பெற்ற மனுக்கள் மீது முன்மொழிவு செய்து ஆய்வு மேற்கொண்டு உடனடியாக புதிய பகுதி நேர ரேஷன் கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும். ரேஷன் கடைகள் தொடர்பாக வரப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கூட்டுறவு மண்டல இணைப்பதிவாளர் கந்தராஜா, மாவட்ட வழங்கல் அலுவலர் கவுசல்யா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com