உணவு பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம்

அரியலூர் மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் 4 கிராமங்களில் இன்று நடக்கிறது.
உணவு பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம்
Published on

 அரியலூர் மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொதுமக்கள் குறைதீர் கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை 4 கிராமங்களில் நடைபெற உள்ளது. அந்த கிராமங்கள் விவரம் வருமாறு:-

அரியலூர் வட்டாரத்திற்கு குலமாணிக்கம் (மேற்கு) கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு சூயமணலில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மண்டல மேலாளர் தலைமையிலும், செந்துறை வட்டாரத்திற்கு இரும்புலிக்குறிச்சியில் பொது வினியோக திட்ட துணைபதிவாளர் தலைமையிலும், ஆண்டிமடம் வட்டாரத்திற்கு பெரிய கிருஷ்ணாபுரத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனித்துணை ஆட்சியர் தலைமையிலும் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது. மேற்கண்ட கூட்டத்தினை, சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னின்று நடத்துவார்கள். அக்கூட்டத்தில், கூட்டுறவு துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள். எனவே கூட்டத்தில், பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால், அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் மற்றும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 2019-ன் படி பயன்பெறலாம், என்று மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com