விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மணிக்கண்ணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமாரி வரவேற்றார். மாவட்ட செயலாளர் மலர், கோரிக்கை விளக்கவுரையாற்றினார். கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் நாகராஜ், முன்னாள் மாநில துணைத்தலைவர்கள் பாரதி, சாவித்திரி, மாநில தணிக்கையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநில துணைத்தலைவர் அபராஜிதன் நிறைவுரையாற்றினார்.

காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும், காலை உணவுத்திட்டத்தை சத்துணவு திட்டத்தின் மூலம் சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்த வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த வேண்டும், கிராம நிர்வாக ஊழியர்களுக்கு வழங்குவதைப்போல் ஓய்வூதியம் ரூ.6,750-ஐ அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் சுந்தர்ராமன், வெங்கடேசன், அருளரசி, தனஞ்செயன், லட்சுமி, சந்திரா, சித்ரா, ரவிஸ்ரீ, பவானி உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தேவதாஸ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com