கன்னியாகுமரியில் போலீசாரை தாக்கியதாக 16 பேருக்கு வலைவீச்சு..!

கன்னியாகுமரி அருகே பணியில் இருந்த போலீசாரை தாக்கிய வழக்கில் 16 பேர் மீது வழக்குபதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரியில் போலீசாரை தாக்கியதாக 16 பேருக்கு வலைவீச்சு..!
Published on

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருபவர் ராபட் சிங் (53). இதுபோன்று ஈத்தாமொழி காவல்நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருபவர் ராஜ்திலக் (39).

இவர்கள் 2 பேரும் என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள சின்னணைந்தான்விளையில் உள்ள பிச்சைக்காலசுவாமி கோயில் முன்பு நேற்று மாலை அலுவல் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சிவகுமார், பிரதீஷ், ஐயப்பன், பிரபாஸ் உள்பட 16 பேர் ஒன்றுகூடி கோவில் நுழைவாயிலில் ஆர்ச்சில் வைத்திருந்த கம்புகளை அகற்ற வந்தவர்களை பணியில் இருந்த 2 போலீசாரும் மேற்படி நபர்களை கலைந்து செல்லுங்கள், கம்புகளை அகற்றாதீர்கள் என கூறியதாக தெரிகிறது.

அதற்கு மேற்படி நபர்கள் தகாத வார்த்தைகளில் பேசி இரண்டு போலீசையும் பிடித்து கல் போன்ற ஆயுதங்களால் தாக்கியதாக தெரிகிறது. மேலும் காவல் பணியில் இருந்த போலீசாரை அரசு வேலை செய்யவிடாமல் தடுத்து இங்கு போலீஸ் பாதுகாப்பு தேவை இல்லை ஓடி தப்பி விடுங்கள் என கொலை மிரட்டல் விடுத்தாக தெரிகிறது. இதுகுறித்து ராபட்சிங் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கபிரியேல் 16 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com