

கூடலூர்,
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி வனிதா (வயது 34). இவர்களுக்கு அபித்ஷா (12), அக்ஷிதா (10), அனுசியா (8) என்ற 3 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக வனிதாவிற்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முருகனுக்கும், வனிதாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த வனிதா, தனது 3 பெண் குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்தார். தொடர்ந்து அவரும் விஷம் குடித்தார். இதில் வனிதாவும், அவரது குழந்தைகளும் வீட்டில் மயங்கியநிலையில் கிடந்தனர்.