நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிஊட்டியில் தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டம்

நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி ஊட்டியில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினரை படத்தில் காணலாம்.
ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட தி.மு.க.வினரை படத்தில் காணலாம்.
Published on

ஊட்டி: நீட் தேர்வை ரத்துசெய்ய கோரி ஊட்டியில், தி.மு.க.வினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உண்ணாவிரத போராட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் உண்ணாவிரத போராட்டம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் நேற்று நடந்தது. இதேபோல் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவ அணி உள்பட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். அப்போது அவர்கள், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காத மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் கூறியதாவது:-

உயிர்கள் பலி

நீட் தேர்வு தற்போது பல்வேறு உயிர்களை பலி வாங்கி கொண்டிருக்கிறது. ஆனால் இதுகுறித்து மத்திய அரசு கண்டுகொள்ளாமல் தான் தோன்றித்தனமாக செயல்படுகிறது. தமிழகத்தில் தற்போது உள்ள சூழ்நிலையில் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பு எட்டாக்கனியாக உள்ளது. தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்ற பிறகு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும், குறிப்பாக தமிழக கவர்னருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கவர்னர் மசோதாவை நீண்ட காலம் கிடப்பில் போட்டு விட்டார். எனவே இந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், நகர செயலாளர் ஜார்ஜ் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com