போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்களுக்காககாமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. நிர்வாகவியல் படிப்பு

போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்களுக்காக காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. நிர்வாகவியல் படிப்பு
போட்டித்தேர்வுக்கு தயாராகுபவர்களுக்காககாமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. நிர்வாகவியல் படிப்பு
Published on

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் இளைஞர் நலக்கல்வியியல் துறை சார்பில், 2 வருட எம்.ஏ., நிர்வாகவியல் படிப்பு நடத்தப்படுகிறது. இந்த படிப்புகளில் 2023-24 கல்வியாண்டில் சேர விரும்பும் மாணவ, மாணவிகள் பல்கலைக்கழகத்தின் https://mkuniversity.ac.in/new/ அல்லது https://admissions.mkuniversity.ac.in/ஆகிய இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த படிப்பில் சேர ஏதாவது பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்த படிப்பில் 20 மாணவர்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளப்படுவர். மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் யூ.பி.எஸ்.சி. தேர்வுகள், பிற போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் இந்த படிப்பில் சேர்ந்து பயனடையலாம். பாடத்திட்டம் முழுவதுமாக போட்டித்தேர்வுகளை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளதால், அரசு வேலைவாய்ப்பு எளிதில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com