கருணாநிதி உருவப்படத்துக்கு, ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளராக தேர்வு செய்யப்பட்ட வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பெரியார், அண்ணா சிலைகளுக்கும், கருணாநிதி உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கருணாநிதி உருவப்படத்துக்கு, ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
Published on

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளராக தேர்வு செய்யப்பட்ட வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பெரியார், அண்ணா சிலைகளுக்கும், கருணாநிதி உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மீண்டும் தேர்வு

சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளராக வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதையொட்டி அவர் நேற்று காலை சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலை, சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து 2 சிலைகள் அருகிலும் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் மணக்காடு பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தி.மு.க. கொடியேற்றி வைத்தார். தொடர்ந்து அங்கிருந்த தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது

முன்னதாக மாலை அணிவிக்க வந்த வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு திரளான தொண்டர்கள் கூடி நின்று மேள, தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் மற்றும் பழைய பஸ் நிலைய பகுதிகளில் தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டம் அலைமோதியது.

தொடர்ந்து அவர் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ஏராளமானவர்கள் கரகாட்டம், ஒயிலாட்டத்துடன் பட்டாசு வெடித்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாழ்த்து

இந்த நிகழ்ச்சியில் சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் குமரவேல், திருநாவுக்கரசு, மஞ்சுளா சுரேஷ், மாநகர செயலாளர் ரகுபதி, பணிக்குழு தலைவர் சாந்தமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.அண்ணாமலை, அசோகன், சத்யாகுமார், ஏ.ஆர்.ராஜேந்திரன், நாசர்கான், குபேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் தாமரை கண்ணன், பகுதி செயலாளர் சரவணன், மாநகர விவசாய தொழிலாளர் அணி முன்னாள் அமைப்பாளர் ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் செல்வகுமரன் (ஓமலூர் தெற்கு), ரமேஷ் (ஓமலூர் கிழக்கு), பாலசுப்ரமணியம் (ஓமலூர் வடக்கு), ஒன்றிய செயலாளர்கள் அறிவழகன் (காடையாம்பட்டி கிழக்கு), ரவிச்சந்திரன் (காடையாம்பட்டி மேற்கு), ரெயின்போ நடராஜன் (சேலம் வடக்கு), ராஜா அய்யப்பன் (தாரமங்கலம் கிழக்கு), மாவட்ட கவுன்சிலர்கள் சண்முகம், அழகிரி, நகர செயலாளர்கள் ரவிச்சந்திரன் (ஓமலூர்), பிரபாகரன் (காடையாம்பட்டி), லோகநாதன் (கருப்பூர்), மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அருண் பிரசன்னா, நகர துணை செயலாளர் வியாகத்அலி, மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம், காமலாபுரம் ரமேஷ், புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com