வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வெளிமாநில தொழிலாளர்களுக்கு உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

இதுகுறித்த தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கொரோனா பெருந்தொற்றிலிருந்து கட்டுமான தொழிலாளர்களை பாதுகாத்திடும் சீரிய நோக்கத்துடன் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 13 லட்சத்து 41 ஆயிரத்து 494 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு இணங்க முதற்கட்டமாக 2 லட்சம் கட்டுமான தொழிலாளர் தடுப்பு செலுத்த செலுத்தும் பணியினையும் கொரோனா பெருந்தொற்று பரவ காரணமாக அறிவிக்கப்பட்ட பொது மக்கள் பணி வாய்ப்பை இழந்த குடும்ப அட்டை இல்லாத புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் பசியால் வாழக்கூடாது என்ற உயரிய எண்ணத்தோடு 1 லட்சத்து 29 ஆயிரத்து 446 தொழிலாளர்களுக்கு 6 கோடியே 61 லட்சத்து 44 ஆயிரத்து 243 ரூபாய் மதிப்பீட்டில் 15 கிலோ அரிசி 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகியவை உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் திட்டத்தையும் இன்று நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன், தொழிலாளர்கள் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், தென்சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தொழிலாளர் நலத்துறை செயலர் கிருஷ்குமார், தொழிலாளர் துறை ஆணையர் வள்ளலார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com