

சென்னை,
அரசு தேர்வுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மே மாதம் நடைபெற இருக்கும் பிளஸ்-2 பொதுத் தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் 26-ந்தேதி (இன்று) பிற்பகல் முதல் அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் அந்தந்த கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேற்சொன்ன நாட்களில் விண்ணப்பிக்க தவறியவர்கள் அடுத்த மாதம் 8 மற்றும் 9-ந்தேதிகளில் சிறப்பு அனுமதி (தட்கல்) முறையில் அரசு தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1,000 சிறப்பு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.