

சென்னை,
74 ஆண்டு கால தமிழக அரசியல் வரலாற்றில், முதல் முறையாக 4 பெண்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழக அமைச்சரவையில் முதல் பெண் அமைச்சராக, 1967-ம் ஆண்டு அண்ணா முதல்-அமைச்சராக இருந்தபோது, சத்யவாணி முத்து நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கப்பட்டது.
2011-2016-ம் ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது 3 பெண்கள் அமைச்சராக இருந்தனர். தற்போது, த.வெ.க. அமைச்சரவையில் 4 பெண்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தொழில்துறை அமைச்சராக கீர்த்தனா பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள 23 பெயர்கள் கொண்ட அமைச்சரவை பட்டியலில் 3 பெண்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. எஸ்.கமலி (அவினாசி தொகுதி), சி.விஜயலட்சுமி (குமாரப்பாளையம்), கே.ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்) ஆகியோர் புதிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழக அமைச்சரவையில் பட்டியலினத்தவர்கள் 7 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.