இதுவரை வாங்காதவர்களுக்கு.. திங்கட்கிழமை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு..!


இதுவரை வாங்காதவர்களுக்கு.. திங்கட்கிழமை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு..!
x

டோக்கன்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டு அதன்படி பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.

சென்னை,

தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியவற்றுடன் ரூ.3 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், ரொக்கப்பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் 8-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது.

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்காக டோக்கன்கள் முறையாக வினியோகம் செய்யப்பட்டு அதன்படி பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.

இந்தநிலையில், பொங்கல் பண்டிகை முடிந்தபோதும் சுமார் 90 சதவீத ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.3 ஆயிரமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விடுபட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.3 ஆயிரம் ரொக்கப்பணமும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும் விடுபட்டவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அடுத்த அறிவிப்பு வரும் வரை பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடரும் என்றும் ரேஷன்கடை வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story