ஆட்டோவை விலைக்கு வாங்கி தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யும் வெளிநாட்டு தம்பதி

தமிழக மக்களின் உணவு முறை மிகவும் ரசிக்கும்படி உள்ளதாக வெளிநாட்டு தம்பதி கூறினர்.
ஆட்டோவை விலைக்கு வாங்கி தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்யும் வெளிநாட்டு தம்பதி
Published on: 

ராமேசுவரம்,

இங்கிலாந்தை சேர்ந்தவர் மோரிஸ் (வயது 38), அவருடைய மனைவி ஒலிவியா (34). இவர்கள் ஒரு வாரத்திற்கு முன்பு லண்டனில் இருந்து விமானத்தில் சென்னை வந்தனர். இந்தியாவில் பல்வேறு இடங்களில் சுற்றிப்பார்க்க வசதியாக ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்துக்கு ஆட்டோ ஒன்றை வாங்கினர். அதை மோரிஸ் இயக்கி வருகிறார்.

தங்கள் உடைமைகளுடன் ஆட்டோவில் பயணித்து பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்து வருகின்றனர். மகாபலிபுரம், தஞ்சாவூர், ராமநாதபுரம் வழியாக ராமேசுவரம் வந்தனர். அங்கிருந்து தனுஷ்கோடி சென்று கடல் மற்றும் கடற்கரை அழகை பார்த்து ரசித்தனர். நேற்று தூத்துக்குடி நோக்கி புறப்பட்டனர்.

இதுகுறித்து வெளிநாட்டு தம்பதி கூறியதாவது:-

இந்திய மக்களின் கலாசாரம் குறித்து தெரிந்து கொள்வதற்காக பல்வேறு சுற்றுலா தலங்களை ஆட்டோவில் சென்று றிப்பார்த்து வருகிறோம். ஒரு நாளைக்கு 100 முதல் 200 கி.மீ. வரை பயணம் செய்கிறோம். தமிழக மக்களின் உணவுமுறை, கலை,கலாசாரங்களை பார்க்கும்போது மிக அருமை.

குறிப்பாக மக்களின் உணவு முறை மிகவும் ரசிக்கும்படி உள்ளது. தற்போது ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி சென்று அங்கிருந்து கன்னியாகுமரி, கேரளா செல்ல திட்டமிட்டு உள்ளோம். பின்னர் கோவா சென்று டெல்லியில் எங்கள் பயணத்தை நிறைவுசெய்ய உள்ளோம். அதற்கு இன்னும் 6 மாத காலம் ஆகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com