கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகளை வாங்க வெளிமாநில வியாபாரிகள் குவிந்தனர்

கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகளை வாங்க வெளிமாநில வியாபாரிகள் குவிந்தனர்
கருங்கல்பாளையம் சந்தையில் மாடுகளை வாங்க வெளிமாநில வியாபாரிகள் குவிந்தனர்
Published on

ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை மாட்டுச்சந்தை கூடுகிறது. அதேபோல் நேற்று கூடிய சந்தைக்கு ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் 350 பசு மாடுகளும், 350 எருமை மாடுகளும் என மொத்தம் 700 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு இருந்தன. இதேபோல் 70 கன்றுக்குட்டிகளையும் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.

இந்த மாடுகளை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் பலர் குவிந்தனர். அவர்கள் விவசாயிகளிடம் விலைபேசி மாடுகளை வாங்கி சென்றனர். இதில் பசு மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.85 ஆயிரம் வரையும், எருமை மாடு ஒன்று ரூ.25 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும் விலைபோனது. இதேபோல் கன்றுக்குட்டிகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை விற்பனையானது. இந்த மாடுகளை லாரிகள், சரக்கு ஆட்டோக்களில் ஏற்றிக்கொண்டு வியாபாரிகள் தங்களது பகுதிகளுக்கு கொண்டு சென்றனர்.

இந்த சந்தையில் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட மாடுகளில் 90 சதவீத மாடுகள் விற்பனையானதாக சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com