

பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான நேற்று தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் மிக உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமான கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் காணும் பொங்கலையொட்டி இத்தாலி, பிரான்ஸ், அமெரிக்கா, பெல்ஜியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குவிந்துள்ளனர். மேலும் கோவில் வளாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரகதீஸ்வரருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் ஆராதனையில் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.