ஜெயக்குமார் தோட்டத்தில் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து சோதனை

ஜெயக்குமார் தனசிங் இறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை
ஜெயக்குமார் தோட்டத்தில் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து சோதனை
Published on

திசையன்விளை,

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரைச் சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங் (வயது 60). நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த இவர் கடந்த 4-ந் தேதி தனது வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் உடல் கருகிய நிலையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவங்கள் குறித்து விசாரிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் மேற்பார்வையில் ஒவ்வொரு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

ஜெயக்குமார் தனசிங் இறந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து உறுதியான தகவல் கிடைக்கவில்லை.இதனால் கூடுதல் தடயங்களை சேகரிப்பதற்காக மதுரை, கோவையில் இருந்து தடயவியல் புலனாய்வு துறை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கடந்த 2 நாட்களாக தோட்டத்தில் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.  தடயவியல் புலனாய்வு துறையினர் தோட்டத்திற்கு சென்று தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள்.  தோட்டத்தில்  ஒவ்வொரு பகுதியாக அங்குலம், அங்குலமாக சோதனை செய்து தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com