மேகமலை அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை

வனத்துறை தடையால் அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தேனி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே மேகமலை அருவி உள்ளது. இந்த அருவியில் குளிப்பதற்காக தேனி மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்பட வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

வனத்துறை தடை

இந்த நிலையில், தேனி மாவட்டம் மேகமலை அருவிப் பகுதியில் சீரமைப்புப் பணிகளுக்காக இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. பணிகள் முடியும் வரை தடை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனத்துறையின் தடையால் அருவிக்கு குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com