

சென்னை,
கடந்த ஓராண்டில் இளம்யானைகள் உயிரிழப்பு என்பது அதிகரித்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குழு ஒன்றை அமைத்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. குழுவில் ஐ.எப்.எஸ் அதிகாரி அன்வர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழு நேரில் சென்று ஆய்வு நடத்தி யானை இறப்பிற்கான காரணங்களை அப்பகுதி மக்களிடம் கேட்டு, யானைகள் இறக்காத வண்ணம் எவ்வாறு புற நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று தமிழக அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டுமென்று வனத்துறை உத்தரவிட்டுள்ளது.