வெள்ளியங்கிரி மலையேற நாளை முதல் வனத்துறை அனுமதி

மலை யேறும் பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
வெள்ளியங்கிரி மலையேற நாளை முதல் வனத்துறை அனுமதி
Published on

கோவை,

கோயம்புத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இதன் அருகே 7-வது மலையில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாக வீற்றிருக்கிறார். இது தென்கைலாயம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த மலைக்கு அடர்ந்த வனப்பகுதி வழியாகவும், மலைமீதும் நடந்து செல்ல வேண்டும் என்பதால், காலநிலை காரணமாக குளிர்காலத்தில் செல்ல அனுமதி அளிப்பது இல்லை. மார்ச், ஏப்ரல் மற்றும் மே ஆகிய மாதத்தில் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

Also Read
வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஆதியோகி சிலை கின்னஸ் சாதனை படைத்தது
வெள்ளியங்கிரி மலையேற நாளை முதல் வனத்துறை அனுமதி

இந்நிலையில் கோர்ட்டு உத்தரவு காரணமாக தற்போது பிப்ரவரி 1-ந் தேதி (நாளை) முதல் மலையேற பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் மலை யேறும் பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com