ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனசரக அலுவலர் கைது

செங்குன்றம் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இந்த அலுவலகத்தில் வனச்சரக அலுவலராக சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வனசரக அலுவலர் கைது
Published on

ஊத்துக்கோட்டை,

செம்மரக்கட்டைகள் வாங்கி அதனை விற்பதற்கான ஒப்புதல் கடிதத்திற்கு விண்ணப்பித்த பெண்ணிடம் ரூ. 50,000 லஞ்சம் வாங்கிய வனச்சரக அலுவலர் கைது செய்யப்பட்டார்.

ஊத்துக்கோட்டை அடுத்த சீத்தஞ்சேரி கிராமத்தில் வனச்சரக அலுவலகம் உள்ளது. செங்குன்றம் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள இந்த அலுவலகத்தில் வனச்சரக அலுவலராக சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம் புல்லரம்பாக்கத்தைச் சேர்ந்த சாந்தி (40வயது) என்பவர் செம்மரக்கட்டைகளை வாங்கி, விற்பதற்கான ஒப்புதல் கடிதத்திற்கு விண்ணப்பத்திருந்தார்.

பின்னர் வனச்சரக அலுவலர் சரவணன் 50,000 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சாந்தி திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகாரளித்தார். மேலும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுறுத்தலின்படி சீத்தஞ்சேரி வனத்துறை அலுவலகத்தில் இருந்த வனச்சரக அலுவலர் சரவணனிடம் 50,000 ரூபாயை சாந்தி வழங்கினார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சரவணனை கையும்களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com