விருப்பு வெறுப்புகளை மறந்துவிடுங்கள்: இயக்குனர் அமீர் வாட்ஸ் அப் பதிவு

விருப்பு வெறுப்புகளை மறந்துவிடுங்கள்: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்று அமீர் கூறியுள்ளார்.
விருப்பு வெறுப்புகளை மறந்துவிடுங்கள்: இயக்குனர் அமீர் வாட்ஸ் அப் பதிவு
Published on

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி தவெக 103 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. விஜய் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. திமுகவுக்கு இந்த தேர்தலில் பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது. மெஜாரிட்டிக்கு 118 தொகுதிகளில் வெற்றி தேவைப்படுகிறது. இதனால், விஜய் கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

முன்னிலை நிலவரங்கள் மாறிக்கொண்டே இருப்பதால் இன்னும் சில மணி நேரங்கள் கழித்தே உறுதியான முடிவுகள் தெரிய வரும் என்பதால் அரசியல் கட்சியினர் திக் திக் மனநிலையுடன் முடிவுகளை கவனித்து வருகின்றனர். விஜய் முன்னிலை பெற தொடங்கியிருப்பதால் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் அமீர் தனது வாட்ஸ் அப் பதிவில் கூறியிருப்பதாவது: “விருப்பு வெறுப்புகளை மறந்துவிடுங்கள்: மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்று அமீர் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com