தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: மத்திய அமைச்சர் எல்.முருகன்

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணி. எங்கள் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கூட்டணியாக உள்ளது என்று எல்.முருகன் கூறினார்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி: மத்திய அமைச்சர் எல்.முருகன்
Published on

மத்திய அமைச்சர் எல். முருகன் புதுவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஐந்து மாநில தேர்தல்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெறும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி உறுதி செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. திமுக ஆட்சி வீட்டுக்கு போவதும் உறுதி செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. திமுக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது இன்று வரை தெரியவில்லை. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி பிரமாண்ட கூட்டத்தை நடத்தியுள்ளது. கூட்டணி கட்சி தலைவர்கள் மேடையேறியதை நீங்களே பார்த்துள்ளீர்கள்.

தேசிய ஜனநாயக கூட்டணி வலுவான கூட்டணி. எங்கள் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் கூட்டணியாக உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எந்தெந்த கட்சிகள் வருகிறார்கள் என்பதைப் பார்ப்போம். எல்லா கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.நாம் தேர்தலுக்காக பட்ஜெட் தயாரிப்பவர்கள் அல்ல. நாம் எப்போதும் நாட்டின் வளர்ச்சி, நாட்டின் தொலைநோக்குப் பார்வை, வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கித்தான் இந்த பட்ஜெட்டை தயாரித்திருக்கிறோம்,” இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com