தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் வேலூர் மாவட்ட செயலாளர் வாசு


தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் வேலூர் மாவட்ட செயலாளர் வாசு
x

2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக வாசு போட்டியிட்டார்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் எல்.கே.எம்.பி.வாசு. அ.தி.மு.க. முன்னாள் வேலூர் மாவட்ட செயலாளர். இவர் 1991-ம் ஆண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அ.தி.மு.க. மாணவர் அணி செயலாளராகவும், 96-ம் ஆண்டு வேலூர் நகரசபை அ.தி.மு.க. குழு தலைவராகவும் பணியாற்றியவர்.

2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக பணியாற்றினார். அப்போது கிழக்கு மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், குடியாத்தம், அணைக்கட்டு, ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டார். 2017-ம் ஆண்டு அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளராக இருந்தார்.

இந்த நிலையில், எல்.கே.எம்.பி.வாசு சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார். அப்போது எல்.கே.எம்.பி.வாசு, விஜய்க்கு எம்.ஜி.ஆர். புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கினார். நிகழ்ச்சியின் போது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழக வெற்றிக் கழக வேலூர் மாவட்ட செயலாளர் வேல்முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

1 More update

Next Story