முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தின அமைதி ஊர்வலம்

தஞ்சையில் நடந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தின அமைதி ஊர்வலத்தில் கருப்பு சின்னம் அணிந்து தி.மு.க.வினர் பங்கேற்றனர்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தின அமைதி ஊர்வலம்
Published on

தஞ்சையில் நடந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நினைவு தின அமைதி ஊர்வலத்தில் கருப்பு சின்னம் அணிந்து தி.மு.க.வினர் பங்கேற்றனர்.

கருணாநிதி நினைவு தினம்

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி மத்திய மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி பேரூர் தி.மு.க சார்பில் தஞ்சை ரெயிலடியில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டது. மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தலைமையில் புறப்பட்ட இந்த ஊர்வலத்தில் ஏராளமான தி.மு.கவினர் சட்டையில் கருப்பு சின்னம் அணிந்து கலந்து கொண்டனர்.

இந்த அமைதி ஊர்வலம் எம்.கே.மூப்பனார் சாலை வழியாக கலைஞர் அறிவாலயத்தை வந்தடைந்தது. ஊர்வலத்தில் கருணாநிதி உருவப்படம் மற்றும் 12 அடி உயரத்தில் பேனா உருவம் வடிவமைப்புடன் கூடிய வாகனம் வந்தது. பின்னர் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலை மற்றும் உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் அண்ணா சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, மாநகர செயலாளரும், மேயருமான சண். ராமநாதன், மாவட்ட பொருளாளர் எல்.ஜி. அண்ணா, அவைத் தலைவர் இறைவன், செயற்குழு உறுப்பினர் செல்வம், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், பகுதி செயலாளர்கள், இளைஞரணியினர், மகளிரணியினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com