

சென்னை,
தமிழக முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, ஒடிசா மாநில தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். ஒடிசா மாநில கவர்னர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
திரிபாதி தமிழக காவல்துறையில் பல்வேறு பதவிகளை திறம்பட வகித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனராக 3 முறை பணியாற்றி உள்ளார். அவர் தமிழக காவல்துறையில் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றி ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.