

சென்னை,
கடந்த தி.மு.க. ஆட்சியின்போது, தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.
இது தொடர்பாக முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேசுக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் 16-ந்தேதி அன்பில் மகேசுக்கு சொந்தமான இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் அன்பில் மகேஸ் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்தநிலையில்,திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை அமைந்தகரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்துள்ள அவரை சென்னை போலீஸ் கமிஷன் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார். கமிஷனர் அலுவலகத்தில் உள்ள 2-வது தளத்தில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐகோர்ட்டில் அன்பில் மகேஷ்தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட சம்பவம் திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.