முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க இருவாரம் அவகாசம்

சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தொடர்ந்த வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க இருவாரம் அவகாசம்
Published on

சென்னை,

சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு போதிய வசதிகள் செய்து கொடுக்கவில்லை என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட முன்னாள் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

காவலர் உட்கட்டமைப்பு, வாகன வசதி ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு செய்து கொடுக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஆனால் அது முறையாக செய்து கொடுக்கப்படவில்லை என 2018 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற அவர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக ஐகோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு வழக்கறிஞர் அவகாசம் கோரினார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அரசுக்கு 2 வாரங்கள் அவகாசம் வழங்கி வழக்கை ஒத்தி வைத்தனர்.

வழக்கு விசாரணைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பொன்மாணிக்கவேல், தான் தொடுத்த வழக்கில் முன்னாள் அதிகாரிகள் 4 பேரும் ஆஜராக வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com