முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு: மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை காவல்துறையின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே முடித்து வைத்தது ஏன் என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வழக்கு: மாநில மனித உரிமை ஆணையத்துக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி
Published on

சென்னை,

கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது தி.மு.க. பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார் மற்றும் அவரது மகன் ஜெயவர்தன் சார்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மாநில மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்காமல் புகாரை கடந்த ஆண்டு முடித்து வைத்ததற்கு எதிராக ஜெயக்குமார் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த புகாரை காவல்துறையின் அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே முடித்து வைத்தது ஏன் என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

மேலும், காவல்துறை அறிக்கை மீது விசாரணை நடத்தி இருக்க வேண்டும் என்றும் புகாரை முடித்து வைப்பதாக இருந்தால் உரிய காரணங்களை தெரிவித்து இருக்க வேண்டும் என்றும் கூறி வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com