

சென்னை,
நாளையுடன் 8ம் கட்ட ஊரடங்கு நிறைவடைவதால், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். மாவட்ட ஆட்சியர்களுடனான முதலமைச்சர் நடத்திவரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
இதனிடையே துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து, கட்சி வளர்ச்சிக்காக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும், வரும் 2021ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றும் வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன், துணை முதல்வர் ஓ.பி.எஸ்சை இன்று திடீரென சந்தித்துள்ளார்.