முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும் சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகை மனு

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும் சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகை மனு.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்கவேண்டும் சைதாப்பேட்டை கோர்ட்டில் நடிகை மனு
Published on

ஆலந்தூர்,

நடிகை அளித்த பாலியல் புகாரின்பேரில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வன்கொடுமை உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மணிகண்டன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சைதாப்பேட்டை பெருநகர 9-வது கோர்ட்டில் நடிகை தரப்பில் நஷ்டஈடு கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழும்போது பிரச்சினை ஏற்பட்டால் இழப்பீடு கோருவதற்கான நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்து உள்ளேன். என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி மோசடி செய்ததால் உடல் அளவில் பாதிக்கப்பட்டு உள்ளேன். மன உளைச்சல் காரணமாக மணிகண்டன் எனக்கு ரூ.10 கோடி நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் வீட்டு வாடகை, மருத்துவ செலவு உள்பட இடைக்கால நிவாரண தொகையாக மாதந்தோறும் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் வழங்க உத்தரவிடவேண்டும் என அதில் கூறி உள்ளார்.

இந்த மனு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி விசாரணைக்கு வரும் என கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com